கோயிலின் சிறப்பு

கைங்கர்யம் செய்ய அழைக்கிறோம்!

  • காவிரியின் துணைநதியாக பாயும் முடிகொண்டான் ஆறு. அழகுமிகுந்த அக்ரஹாரங்கள். சோழர்கள் கட்டிய பிரமாண்டமான யானை ஏறா பெரிய கோயில், கர்வத்துடன் கதிரவனைப் பார்க்கும் நெல்வயல்கள் என்று ஆன்மிகம் செழித்து நிற்கிறது நன்னிலம். திருவாரூரில் இருந்து 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த புண்ணிய ஷேத்திரம்.
  • ஸ்ரீ ராதாகல்யாணம், கோகுலாஷ்டமி, நவராத்திரி, கருடசேவை, உறியடி உற்சவம் என்று இறைவனை உருகி, உருகி தரிசிப்பதில் இன்னும் பாரத பண்பாடு பின்பற்றி பெருமை சேர்க்கிறது நன்னிலம் கீழ அக்ரஹாரம்.
  • சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டு 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீபூமி, நீலா சமேத வரதராஜ பெருமாள் கோயில் நன்னிலம் கீழ அக்ரஹாரத்தில் அமைந்துள்ளது. உற்சவ மூர்த்தியாக ருக்மணி, சத்யபாமா சமேத ஸ்ரீ வேணு கோபால சுவாமி எழுந்தருளி இருக்கிறார். சஞ்சீவி மலை சுமந்த ஜெயவீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி அருட்காட்சி தருகிறார்.
  • கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆஞ்சநேயர் சன்னிதி, கருடாழ்வார் சன்னிதி கொண்டு அமைந்துள்ள இந்த கோயிலுக்கு கான்கிரீட் முன் மண்டபமும், ஆஞ்சநேயர் சன்னதியும் எழுப்ப 15 லட்சம் ரூபாய் செலவில் திருப்பணி நடத்தப்பட உள்ளது.
  • உலகெங்கிலும் உள்ள கிருஷ்ண பக்தர்கள், நன்னிலம் ஊர் மக்கள், ஆன்மிக அன்பர்கள் தரும் நன்கொடையால் வேணுகோபாலன் வீற்றிருக்கும் இந்த கோயில் வசீகரமாய் எழுந்து நிற்கப்போகிறது.
  • ஸ்ரீவாஞ்சியம் ஸ்ரீ ராமசந்திர பாகவதர் போன்று எண்ணற்ற பிரபல பாகவதர்கள் மனம் உருகி பாடி, 110 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்ரீ ராதா கல்யாண உற்சவம் நடந்து வரும் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை விரைவில் இந்த தேசம் தரிசிக்க இருக்கிறது.
  • ஆன்மிக அன்பர்கள், தங்களால் இயன்ற கைங்கர்யம் செய்து ஆலய திருப்பணியில் பங்கேற்று ஒருமுறையேனும் நன்னிலம் பாதம்பட்டு இறையருள் பெற வேண்டுகிறோம்.
இங்ஙனம்

நன்னிலம் வேணு கோபால சுவாமி கைங்கர்ய சபா